Friday, September 20, 2024

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஆனந்த் – ராதிகா தம்பதி

by rajtamil
0 comment 29 views
A+A-
Reset

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் தம்பதிபிரதமர் மோடியிடம் ஆசி பெற்ற ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்

பிரதமர் மோடியிடம் ஆசி பெற்ற ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட்

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தின் 2 ஆம் நாள் நிகழ்வில் பிரதமர் மோடி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த 12 ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, நடைபெற்ற மணமக்களை ஆசீர்வதிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மணமக்களை வாழ்த்திய பிரதமர் மோடி, அவர்களுக்கு திருமண பரிசு வழங்கினார். அப்போது, பிரதமரின் காலை தொட்டு அனந்த் அம்பானி ஆசீர்வாதம் பெற்றார்.

விளம்பரம்

திரைப்பிரபலங்களை பொறுத்த வரை, 2 ஆவது நாள் நிகழ்ச்சியிலும் நடிகர் ரஜினிகாந்த் பாரம்பரிய உடையில் வந்து பலரின் கவனத்தை தன் வயப்படுத்தினார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனது பேத்தி நவ்யாவுடன் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

அத சமயம், நடிகை ஐஸ்வர்யா ராய் வண்ணமிகு ஆடையில் தனியாக வந்து பலரின் கண்களுக்கு விருந்து படைத்தார். நடிகை ஸ்ரீதேவியின் மகளான குஷி கபூரும் கண் கவர் ஆடையில் கலக்கினார். நடிகர் ஷாருக் கான் தனது குடும்பத்தினருடன் வந்து விதவிதமாக போஸ் கொடுத்தார். நடிகர் சஞ்சய் தத், ரன்பீர் கபூர் ஒன்றாக அம்பானி மகனை வாழ்த்தும் நிகழ்ச்சிக்கு வந்தனர்.

இதையும் படிக்க:
Anant – Radhika Wedding : அமிதாப் பச்சன் காலில் விழுந்து வணங்கிய ரஜினிகாந்த் – வைரல் வீடியோ

விளம்பரம்

அதேபோன்று சல்மான் கான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோரும் ஸ்டைலாக வந்தனர். பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்கே உரிய பாணியில், வந்து மணமக்களை வாழ்த்தினர்.

சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், கவுஷிக் சக்கரபோர்தி, சோனு நிகாம், ஹரிஹரன் உள்ளிட்ட பிரபலங்களும் இசை மழையில் மணமக்களை வாழ்த்தினர்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட்டை வாழ்த்தினர்.

விளம்பரம்

மேலும் விளையாட்டு வீராங்கனை மேரிகோம், பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், கிரிக்கெட் வீரர்கள் பும்ரா, சூரியகுமார் யாதவ் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கிரிக்கெட் ஜாம்பாவான் சச்சின், தனது மனைவி அஞ்சலியுடன் பங்கேற்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
mukesh ambani
,
Nita Ambani
,
PM Narendra Modi

You may also like

© RajTamil Network – 2024