Friday, November 8, 2024

பிரதமர் மோடியின் வலதுகரம் – யார் இந்த கைலாசநாதன்?

by rajtamil
0 comment 33 views
A+A-
Reset

பிரதமர் மோடியின் வலதுகரம்.. குஜராத் மாநிலத்தின் சூப்பர் சி.எம்.. யார் இந்த கைலாசநாதன்?யார் இந்த கைலாசநாதன்?

யார் இந்த கைலாசநாதன்?

தெற்கிலிருந்து சென்று வடக்கில் கோலோச்சியவராக கூறப்படும் கைலாசநாதன், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் வலதுகரமாக கூறப்பட்ட 71 வயது கைலாசநாதனின் பின்னணி என்ன?

நாட்டின் அதிகாரமிக்க தலைவராக உள்ள பிரதமர் மோடி, தனது கண்கள், காதுகளுக்கு இணையாக யாராவது ஒருவரை நம்புவாரா என்ற கேள்வி பலருக்கும் இருந்திருக்கும். அதற்கு ஒற்றை பதிலாக கூறப்படுபவர், தெற்கில் இருந்து வடமாநிலத்திற்கு சென்று ஆளுமை மிக்கவராக உயர்ந்த குனியில் கைலாசநாதன்.

கே.கே. என்று அழைக்கப்படும் குனியில் கைலாசநாதன், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த வடகாராவில் 1953 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை உதகையில் தபால் ஊழியராக பணியாற்றிய நிலையில், அங்கு தான் இளம் வயதில் வளர்ந்துள்ளார்.

விளம்பரம்

பின்னர் கல்லூரி படிப்பை முடித்த அவர், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுநிலைப்பட்டம் பெற்றார். லண்டனுக்கு சென்று வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் வாங்கினார்.

இதையும் படிக்க:
செய்தியாளர் சந்திப்பின் போது எச்.டி.குமாரசாமிக்கு திடீரென மூக்கில் ரத்தம் சிந்தியதால் பரபரப்பு

மீண்டும் இந்தியா திரும்பிய அவர் இந்திய குடிமைப்பணி தேர்வு எழுதி 1979-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். பயிற்சிகள் முடிந்து முதன்முறையாக 1981 ஆம் ஆண்டு குஜராத்தில் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் சுரேந்திரநகர் மாவட்டத்தில் 1985 ஆம் ஆண்டு ஆட்சியராக நியமனம் பெற்றார். அடுத்த 2 ஆண்டுகளிலேயே சூரத் மாவட்டத்தில் ஆட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

விளம்பரம்

படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அவர், குஜராத் கடல்சார் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் நகர்புற மேம்பாட்டு துறைக்கு மாறிய அவர், 1994 முதல் 1995 வரை குஜராத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவிவகித்தார்.

1999 மற்றும் 2001 க்கு இடையே அகமதாபாத் நகராட்சி ஆணையராக பொறுப்பெடுத்துக் கொண்ட கைலாஷ்நாதன், ​​குடிநீர் நெருக்கடியைத் தீர்க்க 43 கிலோ மீட்டர் நீளத்துக்கு மிக குறுகிய காலத்தில் குழாய்கள் அமைத்து மக்களின் பாராட்டை பெற்றார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
டெல்லியில் மழைநீரில் சிக்கி 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் பலி.. மாணவர் சங்கத்தினர் போராட்டம்

அதுதான் கைலாசநாதனுக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று அம்மாநில மூத்த அதிகாரிகள் கூறுகிறார்கள். 2001-ஆம் ஆண்டின் இறுதியில் குஜராத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மோடியின் கண்ணில், கைலாசநாதனும் அவரின் நிர்வாக திறனும் பட்டதாக சொல்லப்படுகிறது.

அதன் தாக்கமாக, முதலமைச்சர் அலுவலகத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக 2006-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார் கைலாசநாதன். மெல்ல மெல்ல மோடியின் மிக நெருக்கமானவராக மாறினார். பின்னர், தனது 33 ஆண்டுகால அரசுப்பணியில் இருந்து 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

விளம்பரம்

ஆனால், அவரை அனுப்ப மனமில்லாத மோடி, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் என்ற பதவியை உடனடியாக உருவாக்கி அதில் கைலாசநாதரை அமர வைத்தார்.

மோடியின் கனவுத் திட்டங்களாக கருதப்படும், கிஃப்ட் சிட்டி, நர்மதா திட்டம், காந்தி ஆசிரம மறுமேம்பாட்டுப் பணி உள்ளிட்டவை கைலாசநாதர் கையில் ஒப்படைக்கப்பட்டன.

அதன் பின்னர் 3 முதலமைச்சர்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல், 11 ஆண்டுகளாக முதலமைச்சரின் முதன்மை செயலாளர் என்ற பதவிலேயே கைலாச நாதன் நீடித்து வந்தார். குறிப்பிட்ட கால இடைவெளியில் இவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார்.

விளம்பரம்

பிரதமராக ஆன பிறகும், தனது கோட்டையான குஜராத்தில் செல்வாக்கை தக்க வைக்க கைலாசநாதனுடனான நெருக்கத்தை மோடி தொடர்ந்ததாக கூறப்படுகிறது. கைலாசநாதனின் மூலம், குஜராத் ஆட்சி அதிகாரத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனால், 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, ஆனந்திபென் படேல், விஜய் ரூபானி, பூபேந்திர படேல் என முதலமைச்சர்கள் மாறினாலும், கைலாசநாதனின் செல்வாக்கு குறையவில்லை என்று கூறப்படுகிறது. சில சமயங்களில் முதலமைச்சரை விட இவரின் கைகளே ஓங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இவருக்கு அம்மாநிலத்தில் சூப்பர் சிஎம் என்ற அடைப்பெயரும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

விளம்பரம்
தளபதி விஜய் என்ன படித்திருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா.?
மேலும் செய்திகள்…

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற்றம், பதவி உயர்வுகள் இவரது கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், கைலாசநாதனின் அதிகார வரம்புக்குள் இல்லாத விஷயங்களில் கூட அவரது கருத்துகள் கேட்கப்படும் என்றும் அம்மாநிலத்தில் பேசப்படுகிறது.

அதே சமயம், பிரதமர் மோடியுடன் இருந்த நெருக்கமும், ஆட்சியில் அவருக்கு இருந்த அதிகாரமும் குஜராத்தில் பாஜக மூத்த தலைவர்கள் பலருக்கு பிடிக்கவில்லை என்றும் ஒருபக்கம் பேசப்படுகிறது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் செல்வாக்கு மிக்கவராக இருந்த கைலாசநாதன், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Gujarat
,
PM Narendra Modi

You may also like

© RajTamil Network – 2024