Wednesday, November 6, 2024

பிரதமர் மோடி பதவியேற்பு – மாலத்தீவு அதிபருக்கு அழைப்பு!

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

பிரதமர் மோடி பதவியேற்பு – மாலத்தீவு அதிபருக்கு அழைப்பு!முகமது முய்சு - பிரதமர் மோடி

முகமது முய்சு – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ள நிலையில், அந்த விழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் வங்கதேச நாடுகளின் தலைவர்களோடு, மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்றதை அடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, வங்கதேசம், இலங்கை, பூடான், நேபாளம் மற்றும் மொரீசியஸ் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாலத்தீவு அதிபர் முகமது மொய்சுவும் அழைக்கப்பட்டுள்ளார்.

விளம்பரம்

பிரதமர் மோடி அண்மையில் லட்சத்தீவுகள் சென்றிருந்த நிலையில், அவரது பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் பலரும் விமர்சித்தனர். இதனால், மாலத்தீவு – இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டநிலையில், மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யபப்ட்டனர். அத்துடன் மாலத்தீவு சுற்றுலாவுக்கான முன்பதிவு செய்யக்கூடிய சில நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்துவதாக அறிவித்தன.

இதையும் படிக்க:
புதிய அமைச்சரவையில் எந்தெந்த துறைகள்… சந்திரபாபு நாயுடு கொடுத்த லிஸ்ட் இதுதான்?

இதையடுத்து, சீன சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு அதிகளவில் வர வேண்டும் என்று அதிபர் முகமது மொய்சு வேண்டுகோள் விடுத்தார். இந்தியா உடனான மோதல் போக்கை வளர்க்கும் விதமாக அவர் கூறிய கருத்து உள்நாட்டிலேயே கடும் எதிர்ப்பை சந்தித்தது.

விளம்பரம்

இந்நிலையில், பிரதமர் மோடி மீண்டும் பதவியேற்க உள்ள நிலையில், அந்த விழாவில் பங்கேற்குமாறு முகமது மொய்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது இருநாட்டு அரசியல் வட்டாரத்திலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
oath
,
PM Narendra Modi

You may also like

© RajTamil Network – 2024