Sunday, September 22, 2024

பிரதமர் மோடி 74-வது பிறந்த நாள்: அஜ்மீர் தர்காவில் 4000 கிலோ சைவ விருந்து!

by rajtamil
Published: Updated: 0 comment 14 views
A+A-
Reset

பிரதமர் நரேந்திர மோடியில் 74 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீஃப் தர்காவில் லங்கர் என்றழைக்கப்படும் 4000 கிலோ சைவ சமபந்தி விருந்து அனைவருக்கும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவரது நல்வாழ்வுக்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படவுள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாள்

பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ஷெரீஃப் தர்காவில் செப்டம்பர் 17-ஆம் தேதி 4000 கிலோ சைவ லங்கார் என்றழைக்கப்படும் சைவ சமபந்தி உணவு விநியோகம் செய்யப்படவுள்ளது.

இதையும் படிக்க: அரவிந்த் கேஜரிவாலால் தில்லி முதல்வர் அலுவலகத்துக்குள் நுழைய முடியாது! ஏன்?

சைவ சமபந்தி உணவு

இதுபற்றி தர்காவில் உள்ள சையத் அஃப்ஷான் சிஷ்டி கூறுகையில், “லாங்கரில் அரிசி, சுத்தமான நெய், உலர்ப் பழங்கள் போன்றவைகளுடன் ஹஸ்ரத் குவாஜா மொய்னுதின் சிஷ்டி தர்காவின் 550 ஆண்டுகால பாரம்பரியத்தை எடுத்துச் செல்லும் புகழ்பெற்ற 'பெரிய ஷாஹி டெக்கில்'( உணவு தயாரிக்கும் உலகில் மிகப்பெரிய பாத்திரம்) லங்கார் தயாரிக்கப்படும். இது ஏராளமான ஆதரவற்றவர்களுக்கு நன்கொடையாகவும் வழங்கப்படும்.

இதுகுறித்து தர்கா அதிகாரிகள் கூறுகையில், இந்த முழு நிகழ்வும் அவர்களின் 'சேவா பக்வாடா' எனப்படும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். பிரதமர் நரேந்திர மோடியின் அமைதி, ஒற்றுமை மற்றும் நல்வாழ்வுக்காகவும் தர்காவில் சிறப்பு பிரார்த்தனைகளை செய்யப்படவுள்ளது.

இதையும் படிக்க: வங்கதேச டெஸ்ட் தொடர்: தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்!

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, நாட்டில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் வழிபாடுகள் நடத்தப்படும். பிரதமரின் பிறந்தநாளையொட்டி, 4,000 கிலோ சைவ உணவுகளை நாங்கள் தயார் செய்வோம்.

இந்திய சிறுபான்மை மற்றும் சிஷ்டி அறக்கட்டளை ஆகியவை லாங்கர் உணவை ஏற்பாடு செய்யும், மேலும் அனைத்து விருந்தினர்கள் மற்றும் பக்தர்களுக்கு காலையில் சமபந்தி உணவு விநியோகிக்கப்படும்.

இரவு 10:30 மணிக்கு தீப ஒளி காட்டப்பட்டு தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களால் 'கவ்வாலிகள்’ என்று கூறப்படும் பக்தி இன்னிசை பாடல்களும் பாடப்படவுள்ளன” என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024