பிரதரால் மீள்வாரா எம். ராஜேஷ்?

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

ஜெயம் ரவி – எம். ராஜேஷ் கூட்டணியில் உருவான பிரதர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் எம். ராஜேஷ், ‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழில் வெற்றி பெற்ற நகைச்சுவை பாணி இயக்குநராக வலம் வந்தவர். இவரது படங்களில் நடிகர் சந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள் பெரியளவு கவனம் பெற்றவை.

இன்றுவரை, இவரது ‘நண்பண்டா’ வசனம் நண்பர்களுக்கு இடையேயான பேச்சுகளில் இடம்பெறத் தவறுவதில்லை.

இயக்குநரான ஜோதிகாவின் மகள் தியா..! விருது வென்ற புகைப்படம்!

அடிதடி ஆக்‌ஷன் கமர்சியல் சினிமாவிலிருந்து விலகி சிறிய கதைக்கருவை வைத்து மிக சுவாரஸ்யமான படங்களைக் இயக்கினார்.

ஆனால், ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘மிஸ்டர் லோக்கல்’, ‘வணக்கம்டா மாப்ள’ என தொடர் தோல்விப்படங்களைக் கொடுத்தார். இவை, வணிக வெற்றியையும் பெறாமல் கதையாகவும் சுமாரான படங்களே என்பதால் எம். ராஜேஷின் படங்கள் விமர்சனத்திற்குள்ளாகின.

அதேநேரம், ராஜேஷிடமிருந்து நல்ல படங்கள் வருவதற்கான சாத்தியங்களும் இருப்பதாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது, நடிகர் ஜெயம் ரவியை வைத்து பிரதர் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

மினி மகாராணி… விஜய் – 69 படத்தில் மமிதா பைஜூ!

விரைவில் படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின், ‘மக்காமிஷி’ உள்ளிட்ட பாடல்கள் கவனம் பெற்றுள்ளதால் இப்படத்திலாவது எம். ராஜேஷ் மீள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024