Tuesday, September 24, 2024

பிரயாக்ராஜ் முதல் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு நேரடி ரயில் சேவை தொடக்கம்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

பிரகாக்ராஜ்: பிரயாக்ராஜில் உள்ள சுபேதர்கஞ்ச் ரயில்நிலையத்திலிருந்து, ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு நேரடி ரயில் சேவையை வட-மத்திய ரயில்வே தொடங்கியிருக்கிறது.

இதன் மூலம் பக்தர்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியிருக்கிறது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கத்ராவில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு, சுபேதர்கஞ்ச் ரயில் நிலையத்திலிருந்து தினமும் காலை 10.35 மணிக்கு இந்த ரயில் புறப்படும் என்றும், அடுத்த நாள் காலை 9.15 மணியளவில், வைஷ்ணவி தேவி கோயிலை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில், ஃபதேபூர், கோவிந்தபுரி, துண்ட்லா, அலிகார், தில்லி, நரேலா, சோனிபட், அம்பாலா உள்ளிட்ட ரயில்நிலையங்கள் வழியாகப் பயணிக்கவிருக்கிறது.

நடிகர் தர்ஷன் வழக்கில் முக்கிய புகைப்படம் வைரலானது!

அடுத்த வழித்தடத்தில் வைஷ்ணவி தேவி கோயில் ரயில் நிலையத்திலிருந்து தினமும் பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் 12.35க்கு சுபேதர்கஞ்ச் ரயில் நிலையம் வந்தடையும்.

பிரயாக்ராஜ் மக்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாள் என்று புல்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் படேல் கூறியிருக்கிறார்.

இதுவரை, பக்தர்கள் தில்லி சென்று அங்கிருந்துதான் வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஆனால், தில்லியிலிருந்து வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல பல்வேறு பிரச்னைகள் இருந்தன. தற்போது ரயில் சேவை மூலம் மக்கள் அதிக நிம்மதி அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024