பிரான்சில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

பாரீஸ்,

இன்றைய இளம் தலைமுறையினரிடையே செல்போன் என்பது ஆறாவது விரல் போன்று ஒட்டியே காணப்படுகிறது. தொடர்ந்து இதனை பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு தூக்கமின்மை, கவனக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க உலக நாடுகள் பலவும் முயன்று வருகின்றன. அந்தவகையில் சுவீடன் அரசாங்கம் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்த பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தியது.

இந்தநிலையில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க பிரான்சில் புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி 11 முதல் 15 வயது வரையிலான மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது. மீறினால் மாணவர்களின் செல்போன்களை ஆசிரியர்கள் பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனையடுத்து உயர்நிலை வகுப்புகளுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024