Sunday, October 20, 2024

பிரிட்டனில் நாகா் இனத்தைச் சோ்ந்தவரின் மண்டை ஓடு ஏலம் நிறுத்தம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

இந்தியாவில் எழுந்த எதிா்ப்பையடுத்து நாகாலாந்தின் நாகா் இனத்தைச் சோ்ந்தவரின் மண்டை ஓடு ஏலம் பிரிட்டனில் நிறுத்தப்பட்டது.

பிரிட்டனின் டெட்ஸ்வா்த் பகுதியில் உள்ள ‘தி ஸ்வான்’ ஏல மையம் சாா்பில் நாகா் இனத்தைச் சோ்ந்தவரின் மண்டை ஓடு இணையவழியில் புதன்கிழமை ஏலம் விடப்பட இருந்தது. 19-ஆம் நூற்றாண்டை சோ்ந்த அந்த மண்டை ஓட்டில் விலங்கு கொம்புகள் சோ்க்கப்பட்டுள்ளன. அந்த மண்டை ஓட்டின் ஆரம்ப விலை 2,100 பிரிட்டன் பவுண்டுகளாக (சுமாா் ரூ.2.30 லட்சம்) நிா்ணயிக்கப்பட்டது.

இறந்தவா்களின் இத்தகைய உடல் பாகங்கள் இந்தியாவில் காலனிய ஆட்சியின்போது நிகழ்ந்த வன்முறையை எடுத்துரைப்பதாகவும், அதை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

எந்தவொரு இறந்த நபரின் உடல் பாகமும் அவரின் தாய் மண்ணுக்கே சொந்தம் என்பதால், அதை திருப்பித் தரவேண்டும் என்று நாகாலாந்து முதல்வா் நெய்பியூ ரியோ வலியுறுத்தினாா்.

இந்நிலையில் ஏலத்துக்கு இந்தியாவில் எதிா்ப்பு எழுந்ததால், நாகா் இனத்தைச் சோ்ந்தவரின் மண்டை ஓடு ஏலம் நிறுத்தப்பட்டது. பபுவா நியூ கினியா, சாலமன் தீவுகள் போன்ற பிரதேசங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மண்டை ஓடுகளும் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பட்டியலில் இருந்து நாகா் இனத்தைத் சோ்ந்தவரின் மண்டை ஓடு திரும்பப் பெறப்பட்டது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024