Sunday, September 22, 2024

பிரிட்டன் எம்.பி.யான முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

பிரிட்டன் எம்.பி.யான முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில், லண்டன் ஸ்டராட்போர்டு தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன், 19,145 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.

ஈழத் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் பிரிட்டன் வரலாற்றில் முதல் தமிழ் எம்பி ஆவார். இவரது குடும்பம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்கு பின்னர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர். கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரன். குயின் மேரி பள்ளியில் படித்தவர், ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவ் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பிரிட்டன் எம்.பி.யான முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஸ்ட்ராட்போர்ட் தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப் பெண் உறுப்பினராகவும் பதவியேற்கும் உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ் சமுதாயத்திற்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024