Monday, October 21, 2024

பிரெஞ்சு எரிவாயு நிறுவனம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கமாட்டோம் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியதைத் தொடர்ந்து லெபனாலிலுள்ள பிரெஞ்சு எரிவாயு நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

லெபனான் தலைநகரான பெய்ரூட் தெற்குப் பகுதியில் பிரெஞ்சு எரிவாயு நிறுவனமான ’டோட்டல் எனர்ஜிஸ்’ நிறுவனத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இஸ்ரேலும் ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாகவும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் பேசியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.

தாக்குதல் குறித்து இஸ்ரேல் முன்னதாக எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இருக்கும் இடங்களைக் குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கமாட்டோம்: பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!

பிரான்ஸ் அரசு தங்களது பொருளாதார வளங்களைப் பாதுகாக்கும் நிலையிலும், போர் விவகாரத்தில் மத்தியஸ்தராக இருக்க வேண்டும் என்ற நிலையிலும் இந்தத் தாக்குதல் அவர்களின் நிலைப்பாட்டை கடினமாக்கியுள்ளது. இதன்மூலம் நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாயம் தீவிரமடைந்துள்ளது.

”இந்த சூழ்நிலையை நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பிரெஞ்சு நிறுவனங்கள் மீதானத் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தம்! இஸ்ரேல்

You may also like

© RajTamil Network – 2024