பி.எட்., 4வது செமஸ்டர் தேர்வு வினாத்தாள் கசிந்தது!

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

சென்னை: சென்னை: பி.எட்., 4 ஆவது செமஸ்டர் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதை அடுத்து புதிய வினாத்தாளை இணையதளம் மூலம் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பி.எட்., இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பை நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 760 கல்வியில் கல்லூரிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கல்லூரிகளில் பி.எட்., இரண்டாம் ஆண்டு 4 ஆவது செமஸ்டர் தேர்வு 27 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், வியாழக்கிழமை(ஆக 29) படைப்பு திறனும் உள்ளடக்க கல்வியும் பாடத் தேர்வு நடைபெறுகிறது.

இந்த நிலையில், இன்றைய தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே தேர்வர்களுக்கு வெளியாகி உள்ளதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வெளிநாட்டு மாணவா்கள் சோ்க்கைக்கு
ஆஸ்திரேலியா கட்டுப்பாடு-
இந்தியாவுக்கு பாதிப்பு

இதையடுத்து முன்கூட்டியே வெளியான பி.எட்., வினாத்தாளை திரும்பப் பெறுவதாக பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்றைய தேர்வுக்கான புதிய வினாத்தாளை தேர்வு தொடங்குவதற்கு முன்பாக இணையதளம் வாயிலாக தேர்வு மையங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்படுகளை செய்து வருவதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தேர்வு மையங்களில் காலை 9:15 மணியளவில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து அதை மாணவர்களுக்கு நகல் எடுத்து கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழக அளிவில் நடைபெறும் செமஸ்டர் தேர்வு வினாத்தாளை வெளியிட்டவர்கள் யார் என்பது விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024