புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது

புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைதுபோடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 94 பண்டல்கள் புகையிலைப் பொருள்கள், ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

போடி: போடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 94 பண்டல்கள் புகையிலைப் பொருள்கள், ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கிருஷ்ணவேணி தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி-தேவாரம் சாலையில் வந்த ஓா் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் போடி ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் கணேஷ்பாண்டியன் (42) என்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரது வீட்டிலிருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான 94 பண்டல்கள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து கிடைத்த ரூ.25,100-யையும் பறிமுதல் செய்தனா்.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு