Wednesday, November 6, 2024

புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும்,” – பங்களாதேஷ் இராணுவத் தளபதி வேக்கர் உஸ் ஜமான்

by rajtamil
0 comment 66 views
A+A-
Reset

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அங்கு ராணுவ ஆட்சி அமலாகி உள்ளது.


ஷேக் ஹசீனா வெளியேறிய நிலையில், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி அவருக்கு ராணுவமும் கெடு விதித்து இருந்தது.

இச்சூழ்நிலையில் அந்நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. பிறகு அந்நாட்டு மக்களுக்கு ராணுவ தளபதி வக்கார் ஜமான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது: ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இடைக்கால ஆட்சி அமைக்க நாங்கள் உதவி செய்வோம். முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ராணுவம் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த கடினமான நேரத்தில் நாட்டு மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். அனைவரின் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும். மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்கு செல்ல வேண்டும். நாட்டில் அவசர நிலையோ அல்லது கட்டுப்பாடுகளோ தேவையில்லை. இன்று இரவுக்குள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024