Wednesday, September 25, 2024

புதிய உச்சத்துக்கு பிறகு வெகுவாக சரிந்த இந்திய பங்குச் சந்தை!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

புதிய உச்சத்துக்கு பிறகு வெகுவாக சரிந்த இந்திய பங்குச் சந்தை!பங்குச் சந்தையில் இன்று நடைபெற்ற வர்த்தகத்தில் முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கடும் வீழ்ச்சியை சந்தித்தது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி.சித்தரிக்கப்பட்டது | கோப்புப் படம்

மும்பை: தொடர்ந்து 4 நாட்களாக சாதனை முறியடிப்பு பேரணி நடைபெற்ற நிலையில், உலகளாவிய சந்தைகளின் பலவீனமான போக்குகளுக்குப் மத்தியிலும் முதலீட்டாளர்கள் லாபத்தை முன்பதிவு செய்ய விரும்பியதால் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தது.

இதே வேளையில் புளூ சிப் பங்கான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வீழ்ச்சியும் பெஞ்ச்மார்க்குகளை கீழே அழைத்து சென்றது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகின்ற ஜூலை 23 அன்று 2024 வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகி வரும் நிலையில், பட்ஜெட்டிற்க்கு முன்னதாக முதலீட்டாளர்கள் லாபத்தை முன்பதிவு செய்ததால், பங்குச் சந்தையில் நான்கு நாள் ஏற்றம் ஸ்தம்பித்து சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 738.81 புள்ளிகள் சரிந்து 81,604.65 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 844.36 புள்ளிகள் சரிந்து 80,499.10 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 269.95 புள்ளிகள் சரிந்து 24,530.90 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 292.7 புள்ளிகள் சரிந்து 24,508.15 புள்ளிகளாக இருந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் 5 சதவிகிதம் சரிந்தது. டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிட், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் இன்று சரிந்து முடிந்தத நிலையில் ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகிய பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 7 சதவிகிதம் உயர்ந்து ரூ.6,368 கோடியாக உயர்ந்தது.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்து முடிவடைந்தன. ஷாங்காய் உயர்ந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் (வியாழக்கிழமையன்று) சரிந்து முடிவடைந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.07 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 85.05 டாலராக உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024