புதிய உச்சம்! 2வது நாளாக பங்குச்சந்தை உயர்வுடன் முடிவு!பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி இன்று 2வது நாளாக உயர்வுடன் முடிந்தது.கோப்புப் படம்
பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி இன்று (ஜூன் 26) தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்வுடன் முடிந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 620 புள்ளிகள் உயர்ந்து 78,674.25 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.80 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 147.50புள்ளிகள் உயர்ந்து 23,868.80 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.62 சதவிகிதம் உயர்வாகும்
நேற்றைய வணிக முடிவில், சென்செக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்திருந்தது. இதேபோன்று தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி (23,754) புதிய உச்சத்தில் நிறைவடைந்தது.
இதனிடையே இன்றைய வணிகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை நேற்றைய வரலாற்று உச்சத்தை விஞ்சி நிறைவடைந்துள்ளன.
சென்செக்ஸ் காலையில் 78,094 புள்ளிகளுடன் தொடங்கிய நிலையில், பிற்பாதியில் 77,945.94 என்ற அளவுல் இறக்கத்தை சந்தித்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து, 78,759.40 என்ற புதிய உச்சத்தில் நிறைவு பெற்றது.
பங்குச்சந்தை குறியீட்டிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 19 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 9 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
அதிகபட்சமாக ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
டைட்டன், ஜேர்ஸ்டபிள்யூ ஸ்டீல், டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், எம்&எம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.