Wednesday, September 25, 2024

புதிய சாதனை உச்சத்தில் நிஃப்டி, சென்செக்ஸ்!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

மும்பை: பெஞ்ச்மார்க் குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்டியது.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் பார்மா பங்குகளின் பேரணியால் உந்தப்பட்டு, ஆரம்ப நேர வர்த்தகத்திலிருந்தே இரு குறியீடுகளும் புதிய உச்சத்தை எட்டியது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 502.42 புள்ளிகள் உயர்ந்து 82,637.03 புள்ளிகளை எட்டிய நிலையில் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 105.7 புள்ளிகள் உயர்ந்து 25,257.65 புள்ளிகளை எட்டியது.

இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 231.16 புள்ளிகள் உயர்ந்து 82,365.77-ஆகவும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 83.90 புள்ளிகள் உயர்ந்து 25,235.90-ஆகவும் முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் 2115 பங்குகள் ஏற்றத்திலும், 1630 பங்குகள் சரிந்தும், 117 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமானது.

பேங்க் நிஃப்டி குறியீடு 198.25 புள்ளிகள் உயர்ந்து 51,351 ஆக முடிவடைந்தது. நிஃப்டி மிட்கேப் 100 பங்குகள் 402.70 புள்ளிகள் உயர்ந்து 59,286.65 ஆக முடிவடைந்தது. ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகள் இன்று உயர்ந்து முடிந்தது.

நிஃப்டி 50-ல் சிப்லா, பஜாஜ் ஃபைனான்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, டிவிஸ் லேப் மற்றும் என்டிபிசி ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்த வேளையில் டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டெக் மஹிந்திரா, கோல் இந்தியா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தது முடிந்தது.

13 துறை குறியீடுகளில் எஃப்எம்சிஜி குறியீடு மட்டுமே பின்தங்கியிருந்தது. மீதமுள்ள 12 குறியீடுகள் ஏற்றம் கண்டது. இதில் ரியால்டி, பார்மா மற்றும் ஹெல்த்கேர் தலைமையில் ஒவ்வொன்றும் 1 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

நிஃப்டி ஐடி 0.5 சதவிகித லாபத்துடன் அதன் வெற்றிப் பாதையை தொடர்ந்த நிலையில் நிஃப்டி ஆட்டோ குறியீடும் 0.6 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்று ரூ.3,259.56 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.23 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 80.12 டாலராக உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024