Saturday, September 21, 2024

புதிய ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி நியமனம்…

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

புதிய ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி நியமனம்… வரும் 30 ஆம் தேதி பதவியேற்பு!உபேந்திர திவேதி

உபேந்திர திவேதி

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக தற்போது ஜெனரல் மனோஜ் பாண்டே இருக்கிறார். 2022 ஏப்ரல் மாதம் முதல் மனோஜ் பாண்டே ராணுவ தளபதியாக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், ராணுவத்திற்கு விரைவில் புதிய தளபதி அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியானது. இருப்பினும், மக்களவைத் தேர்தல் காரணமாக அறிவிப்பு வராமல் இருந்தது.

இதையும் படிங்க : வயநாடு vs ரேபரேலி.. ராஜினாமா செய்ய போகும் தொகுதி எது? – ராகுல் காந்தி சொன்ன விளக்கம்!

விளம்பரம்

இந்நிலையில், நாட்டின் அடுத்த ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் திவேதி ராணுவ தலைமை தளபதி பொறுப்பை ஏற்கவுள்ளார்.

General Manoj Pande #COAS & All Ranks of #IndianArmy congratulate #LtGenUpendraDwivedi#VCOAS on being appointed as the 30th Chief of the Army Staff #COAS of the #IndianArmy. #LtGenUpendraDwivedi will assume the appointment of #COAS on 30 Jun 2024 (AN).#IndianArmy… pic.twitter.com/Mk5sN8Vsfh

— ADG PI – INDIAN ARMY (@adgpi) June 11, 2024

விளம்பரம்

இப்போது ராணுவத் துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, நாட்டின் 30வது இராணுவ தலைமை தளபதியாகப் பொறுப்பேற்க இருக்கிறார். இவர் காலாட்படை டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட பல பொறுப்புகளையும் கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Army
,
Indian army

You may also like

© RajTamil Network – 2024