Wednesday, September 18, 2024

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சோலார் டிஜிட்டல் சிக்னல்கள்!

by rajtamil
Published: Updated: 0 comment 17 views
A+A-
Reset

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சோலார் டிஜிட்டல் சிக்னல்கள்!

புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்தும் வகையில் ரூ.2 கோடி செலவில் 84 இடங்களில் சோலார் மூலம் இயங்கும் டிஜிட்டல் சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்து சிக்னல்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், சிக்னல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த போக்குவரத்து காவலர்களுக்கான பயிற்சி முகாம் புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை மைதான வளாகத்தில் இன்று நடைபெற்றது. போக்குவரத்து காவல் துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் திரிபாதி தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் போக்குவரத்து காவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் சாலையில் செல்லும்போது அவர்களின் பாதுகாப்பை சிக்னல்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், சிக்னல்களை பராமரிக்க பத்து வழிமுறைகள் உள்ளது. அந்த 10 வழிமுறைகள் குறித்தும் இந்த பயிற்சி அரங்கில் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சிக்னல்களை திறம்பட கையாண்ட 4 காவலர்களுக்கு 500 ரூபாய் ரொக்கப் பரிசை பிரவீன் குமார் திரிபாதி வழங்கினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024