Saturday, November 2, 2024

புதுச்சேரி விடுதலை நாள்: தேசியக் கொடியேற்றினார் முதல்வர் என்.ரங்கசாமி

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை திடலில் நடைபெற்ற புதுச்சேரியின் விடுதலை நாள் விழாவில் முதல்வர் என். ரங்கசாமி மழையையும் பொருட்படுத்தாமல் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

புதுச்சேரியின் விடுதலை நாள் விழா ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். வெள்ளிக்கிழமை காலையில் கடற்கரை காந்தி சிலை திடலில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் முதல்வர் என். ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக அவர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

சுமார் 300 ஆண்டுகளாக பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்த புதுச்சேரிக்கு 1954-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி விடுதலை கிடைத்தது. ஆனால் சுதந்திர நாளை மட்டும் புதுச்சேரி அரசு கொண்டாடி வந்தது. இதனால் புதுச்சேரி விடுதலை நாளை அரசு கொண்டாட வேண்டும் என்று புதுச்சேரி சுதந்திர போராட்ட தியாகிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதையடுத்து புதுச்சேரியின் விடுதலை நாள் விழா அரசு சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க |தமிழ்நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

வெள்ளிக்கிழமை காலையில் கடற்கரை காந்தி சிலை திடலில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிறிது நேரம் மழை பொய்தது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் முதல்வர் என். ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றினார்.

இதையடுத்து நடைபெற்ற காவல்துறையினரின் மற்றும் மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் என்.ரங்கசாமி ஏற்றுக் கொண்டு பேசினார்.

பின்பு கலைக்குழுவினரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் ரசித்து பார்த்தனர். விழாவில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் புதுச்சேரி விடுதலை நாள் காரைக்கால், ஏனாம், மாஹே பகுதியிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024