Monday, September 23, 2024

புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

யானைகள் கணக்கெடுப்பு குறித்த புத்தகத்தையும் முதல்-அமைச்சர் வெளியிட்டார்.

சென்னை,

சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிண்டி சிறுவர் பூங்காவிற்கு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். ஆண்டுக்கு சுமார் 8 முதல் 9 லட்சம் பேர் பூங்காவை பார்வையிடுவார்கள்.

இந்த சிறுவர் பூங்கா தற்போது ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதற்காக பூங்காவிற்கு வருகை தந்த முதல் அமைச்சர், முதலாவதாக வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 9 நவீன வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, யானைகள் கணக்கெடுப்பு குறித்த புத்தகத்தை வெளியிட்டு, பூங்காவையும் முதல் அமைச்சர் திறந்து வைத்தார்.

குறிப்பாக, வன உயிரினங்களின் அமைவிடங்கள் மற்றும் காடுகள் இயற்கையாக இருப்பது போன்று பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் சிறுவர்களுக்கான நூலகம், விழா அரங்கம், பார்வையாளர்களுக்கான வசதிகள், பறவைகள், விலங்குகளின் வாழ்வியல் முறைகளை அறியும் வகை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024