Sunday, September 22, 2024

புரி ஜெகநாதர் கோயிலின் 4 நுழைவாயில்களும் திறப்பு – ஒடிசா  அரசு அதிரடி!

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

புரி ஜெகநாதர் கோயிலின் 4 நுழைவாயில்களும் திறப்பு – ஒடிசா அரசு அதிரடி!புரி ஜெகநாதர் கோயிலின் 4 நுழைவாயில்களும் திறப்பு - ஒடிசா  அரசு அதிரடி!

ஒடிசா மாநில புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மோகன் மஞ்சி, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், புரி ஜெகநாதர் கோயிலின் அனைத்து கதவுகளையும் பக்தர்களின் வசதிக்காக திறக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை அடுத்து. அம்மாநில முதலமைச்சராக மோகன் மஞ்சி, கடந்த புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அதில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். இதையடுத்து, நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, புரி ஜெகநாதர் கோயிலின் அனைத்து வாயில்களையும் திறப்பது என முடிவு செய்யப்பட்டது.

விளம்பரம்

12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.500 கோடி மதிப்பிலான நிதியையும் அமைச்சரவை ஒதுக்கியுள்ளது. கொரோனா தொற்று காலத்தின்போது, இந்த கோயிலின் கதவுகள் மூடப்பட்டன. பின்னர், தடைகள் அகற்றப்பட்டாலும், இந்த கோயிலின் ஒரு வாயில் வழியாக மட்டுமே பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டது. இதனால், நாள்தோறும் பெரும் கூட்டத்தினர் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. இதையடுத்து, பூரி ஜெகநாதர் கோயிலின் அனைத்து வாயில்களும் திறக்கப்படும் என பாஜக தனது பிரச்சாரத்தின்போது அறிவித்தது.

விளம்பரம்

Also Read :
”400 தொகுதிகள்” மோடி பிரச்சாரத்தால் தோல்வி – மகாராஷ்டிர முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அதைத் தொடர்ந்து, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியதால், புரி ஜெகநாதர் கோயிலின் அனைத்து கதவுகளும் இன்று (ஜூன் 13) முதல் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.3,100 என நிர்ணயம் செய்யப்பட்டு, இது அடுத்த 100 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.50,000 வழங்கும் சுபத்ரா யோஜனா திட்டத்தையும் விரைவில் செயல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.

You may also like

© RajTamil Network – 2024