புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு: பட்ஜெட்டில் அறிவிப்பு!

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு: பட்ஜெட்டில் அறிவிப்பு!2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.கோப்புப் படம்

மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

இதில், புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மூன்று மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 10% வரி விதிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பான தனது உரையில், “புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு நிவாரணமாக மூன்று வகையான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படும். மேலும், மருத்துவ எக்ஸ்-ரே இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் எக்ஸ்-ரே குழாய்கள் மற்றும் ஃபிளாட் பேனல் டிடெக்டர்களுக்கான அடிப்படை சுங்க வரிகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும்” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

வரிவிலக்கு அளிக்கப்பட்ட மூன்று மருந்துகள்:

i) டிராஸ்டுஸுமாப் டெருக்ஸ்டெகான் (Trastuzumab Deruxtecan): மார்பகப் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்து.

ii) ஓசிமெர்டினிப் (Osimertinib): நுரையீரல் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்து.

iii) துர்வாலுமாப் (Durvalumab): நுரையீரல் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்து.

இதன்மூலம், மருத்துவ சிகிச்சைகளை அனைவருக்கும் கிடைக்கும்படியும், மலிவாகவும் மாற்றியுள்ள மத்திய அரசு, மருத்துவத் துறையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மருத்துவத் துறையில் வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும் மத்திய அரசு மேற்கொள்ளும் வலுவான நடவடிக்கைகளை தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.

மருத்துவ எக்ஸ்-ரே இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் எக்ஸ்-ரே குழாய்கள் மற்றும் ஃபிளாட் பேனல் டிடெக்டர்களுக்கான அடிப்படை சுங்க வரிகளில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024