Friday, September 20, 2024

பூமியை நோக்கிவரும் விண்கல்: தாக்குவதற்கு 72% வாய்ப்பு! தேதி அறிவித்த நாசா

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

பூமியை நோக்கிவரும் விண்கல்: தாக்குவதற்கு 72% வாய்ப்பு! தேதி அறிவித்த நாசாமிகவும் அபாயகரமான விண்கல் ஒன்று, பூமியை தாக்க 72% வாய்ப்புள்ளதாக நாசா கணித்துள்ளது. கோப்புப் படம்கோப்புப் படம்

மிகவும் அபாயகரமான விண்கல் ஒன்று, பூமியை தாக்க 72% வாய்ப்புள்ளதாக நாசா கணித்துள்ளது. அது பூமியின் மீது மோதும் காலத்தையும் நாசா வெளியிட்டுள்ளது.

கோள்களின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு குறித்து ஆண்டுக்கு இருமுறை நாசா ஆய்வு மேற்கொள்ளும். அந்தவகையில், 5வது ஆண்டாக கடந்த ஏப்ரல் மாதம் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் சுருக்கத்தை மேரிலாந்தின் லெளரலில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகத்தில் ஜூன் 20 ஆம் தேதி, நாசா வெளியிட்டது.

இதில் நாசாவைத் தவிர, பல்வேறு அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் துறை ரீதியான சர்வதேச கூட்டுப் பணியாளர்கள் என கிட்டத்தட்ட 100 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

இதில், அபாயகரமான விண்கல்லை எதிர்கொள்ளும் பூமியின் திறன் குறித்து அறியப்பட்டதாக நாசா குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தின் கோள்கள் பாதுகாப்பு அதிகாரி, லி்ன்ட்லி ஜான்சன் கூறுகையில், இந்த ஆய்வு ஆரம்ப நிலைகளில் உள்ள நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் சவாலான சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ள அனுமதித்ததாகக் குறிப்பிட்டார்.

நாசா வெளியிட்டுள்ள ஆய்வின் சுருக்கத்தில், ஆரம்பகட்ட கணிப்பின்படி, தோராயமாக அடுத்த 14 ஆண்டுகளில் பூமியின் மீது விண்கல் தாக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துல்லியமாக கணக்கிட்டால், 2038 ஜூலை 12 ஆம் தேதி தாக்குதற்கு 72% வாய்ப்புள்ளது. (இன்னும் 14.25 ஆண்டுகள்)

எனினும் எரிகல்லின் அளவு, கலவை மற்றும் அதன் நீண்ட காலப் பாதையை துல்லியமாக தீர்மானிக்க இந்த ஆரம்பநிலைத் தரவுகள் போதுமானதாக இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024