Saturday, September 21, 2024

பூமியை விட்டு மெல்ல மெல்ல விலகும் நிலவு: ஒரு நாளுக்கு 25 மணி நேரம் என்பது மாறிவிடுமா?

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

நிலவு விலகி செல்வதால் பூமியில் பல வித மாற்றங்கள் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்,

பூமியின் ஒரே ஒரு துணைக்கோளான நிலா பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆய்வாளர் குழு இந்த ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் பூமியிலிருந்து நிலவு மெல்ல மெல்ல விலகி செல்வது தெரிய வந்துள்ளது.

இதனால் பூமியிலும் பல வித மாற்றங்கள் நடக்கும் எனவும், இந்த ஆய்வில் பூமியிலிருந்து நிலா ஆண்டுக்கு சுமார் 3.8 செ.மீ. வீதம் விலகி செல்வதாகவும், இதனால் பூமியில் பகலின் நேரம் அதிகரிக்கும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பூமியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கும் நிலையில், நிலா விலகி செல்வதால் அது 25 மணி நேரமாக அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த மாற்றம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு பிறகே மாறும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடந்த காலங்களிலும் பூமியின் ஒரு நாள் என்பது தொடர்ந்து நீட்டித்தே வந்துள்ளது. சுமார் 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரமாக மட்டுமே இருந்துள்ளது. அது பல கோடி ஆண்டுகளுக்குப் பின்னரே இப்போது இருப்பது போல 24 மணி நேரமாக மாறி இருக்கிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். இந்த இரண்டிற்கும் இருக்கும் அலை சக்திகளில் ஏற்படும் மாற்றமே இதற்குக் காரணமாகும்.

இது தொடர்பாக விஸ்கான்சின்- மாடிசன் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறுகையில், நிலவு நமது பூமியில் இருந்து விலகிச் செல்லும் போது, பூமி சுழலும் வேகமும் வெகுவாக குறையும். இப்படி நிலவு விலகிச் செல்ல செல்ல பூமியின் வேகம் குறைவதால் பகல் நேரம் என்பது அதிகரிக்கும். மேலும் அடுத்த கட்டமாகப் பல பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளை ஆய்வு செய்ய விரும்புகிறோம் என்றார்.

You may also like

© RajTamil Network – 2024