பூரி ஜெகநாதர் கோவில் திருவிழாவில் பட்டாசு குவியல் வெடித்ததில் 15 பேர் காயம்

பூரி,

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் நேற்று சந்தன் ஜாத்ரா திருவிழா நடைபெற்றது. நேற்று இரவு நரேந்திர புஷ்கரிணி நீர்நிலையின் கரையில் திருவிழா சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் சில பக்தர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பட்டாசு குவியல் தீப்பற்றி வெடித்தது.

பட்டாசு வெடித்ததில் அங்கிருந்த பக்தர்கள் காயமடைந்தனர். அவர்களில் சிலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தண்ணீரில் குதித்தனர். படுகாயமடைந்த 15 பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சமூக வலைதளத்தில் பழக்கம்.. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பதி லட்டு விவகாரம்: பிரயாக்ராஜ் கோவில்களில் இனிப்புகளை காணிக்கை செலுத்த தடை