பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை: பிரதமர் மோடி

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

புது தில்லி: நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து நடவடிக்கை தேவை என்று உச்ச நீதிமன்றம் சார்பில் நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒரு சில வாரங்களில், பெண்களுக்கு எதிராக குற்றங்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.

கொல்கத்தாவில், பெண் மருத்துவர் கொலைச் சம்பவம் மற்றும் மகாராஷ்டிரத்தில் பள்ளிச் சிறுமிகள் பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில்தான், உச்ச நீதிமன்றம் சார்பில் நடைபெற்ற மாவட்ட நீதிபதிகள் தேசிய மாநாட்டு விழாவில் பிரதமர் மோடி இதனை வலியுறுத்தியிருக்கிறார்.

கொல்கத்தா சம்பவம்: தினமும் ரொட்டியா? முட்டை நூடுல்ஸ் கேட்கும் குற்றவாளி சஞ்சய் ராய்

உச்ச நீதிமன்றம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவுபெற்றிருப்பதைக் கொண்டாடும் வகையில் 75 ரபாய் மதிப்பிலான நாணயம் வெளியீடு மற்றும் அஞ்சல் தலை வெளியீட்டு விழா மத்திய அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, அனைத்து நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்கும் இரண்டு நாள் தேசிய மாநாடு தில்லி பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கியது.

விழாவில், 75 ரூபாய் நாணயம் மற்றும் அஞ்சல் தலையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான விவகாரம் தீவிர கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நாட்டில் எத்தனையோ கடுமையான சட்டங்கள் உள்ளன, ஆனால், அதுபோன்ற சட்டங்களை நாம் அதிகம் செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்க, மிகவும் வேகமாக செயல்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டும், அப்போதுதான், நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேர் பாதுகாப்பை அனுபவிக்க முடியும் என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024