Friday, October 11, 2024

பெண்கள் டி20 உலகக்கோப்பை; வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 104 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது .

துபாய்,

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது, அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹீலே மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்கம் முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது . இதனால் வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது . வங்காளதேச அணியில் நிகர் சுல்தானா 39 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கரிஷ்மா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் .

தொடர்ந்து 104 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது .

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024