Friday, October 11, 2024

பெண்கள் டி20 உலகக்கோப்பை; வங்காளதேசத்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு

by rajtamil
Published: Updated: 0 comment 0 views
A+A-
Reset

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹீலே மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்

துபாய்,

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது, அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹீலே மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்கிறது .

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024