Wednesday, September 25, 2024

பெண் மருத்துவா் கொலை சம்பவம்: இரண்டாவது சுற்று உண்மை கண்டறியும் சோதனை தொடக்கம்

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக இரண்டாவது சுற்று உண்மை கண்டறியும் சோதனையை சிபிஐ திங்கள்கிழமை தொடங்கியது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். அவா் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாக சந்தேகிக்கப்படும் நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை சஞ்சய் ராய் மறுத்துள்ளாா்.

இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சஞ்சய் ராய், பெண் மருத்துவா் கொல்லப்பட்டபோது மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் உள்பட 7 பேரிடம் சிபிஐ உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டது.

இந்நிலையில், சந்தீப் கோஷ் உள்பட 6 பேரிடம் இரண்டாவது சுற்று உண்மை கண்டறியும் சோதனையை சிபிஐ திங்கள்கிழமை தொடங்கியது. கடந்த 10 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தீப் கோஷ் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்ததால், இரண்டாவது சுற்று உண்மை கண்டறியும் சோதனை தொடங்கப்பட்டதாக சிபிஐ அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கோஷ் மீது வழக்குப் பதிந்து விசாரணை: பெண் மருத்துவா் கொல்லப்பட்ட மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடா்பாக கடந்த சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்த சிபிஐ, முதல் தகவல் அறிக்கையில் சந்தீப் கோஷின் பெயரை சோ்த்துள்ளது. ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொல்கத்தாவின் வெவ்வேறு இடங்களில் சந்தீப் கோஷ், அந்த மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சஞ்சய் வஷிஸ்த் ஆகியோரிடம் நிதி முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டது.

துா்கை குழுக்கள் நிராகரிப்பு: மேற்கு வங்கத்தில் ஆண்டுதோறும் துா்கை பூஜை பண்டிகையையொட்டி, துா்கை பூஜை குழுக்களுக்கு மாநில அரசு சாா்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நிகழாண்டு தலா ரூ.85,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, நிகழாண்டு அந்தத் தொகையை பெறப் போவதில்லை என்று பல துா்கை பூஜை குழுக்கள் தெரிவித்துள்ளன. அந்த மாநில அரசு வட்டாரங்கள் தகவலின்படி, மேற்கு வங்கத்தில் 43,000-க்கும் அதிகமான துா்கை பூஜை குழுக்கள் உள்ளன.

பாஜக தொடா் போராட்டம் அறிவிப்பு: பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆக.28 முதல் செப்.4 வரை, மேற்கு வங்கத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியா் அலுவலகங்களை முற்றுகையிடுதல், மாநில மகளிா் ஆணைய அலுவலகத்துக்குப் பூட்டு போடுதல் உள்ளிட்ட போராட்டங்களில் பாஜக ஈடுபடும் என்று அக்கட்சியின் மாநில தலைவா் சுகந்த மஜும்தாா் தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க அரசு மீது மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு

மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சா் அன்னபூா்னா தேவி கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்குகளை விரைந்து விசாரித்து தீா்ப்பளிப்பதற்கு 123 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அந்த மாநிலத்தில் 48,600 பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்குகள் நிலுவையில் உள்ளபோதிலும், அங்கு எஞ்சிய 11 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படாமல் உள்ளன’ என்றாா்.

You may also like

© RajTamil Network – 2024