பெரியாயிபாளையம் அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஆய்வு

பெரியாயிபாளையம் அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஆய்வுதிருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அவிநாசி, ஜூலை 26: அவிநாசி அருகேயுள்ள பெரியாயிபாளையம் திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது பள்ளி வகுப்பறைகள், கணினி ஆய்வகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததுடன், புத்தகங்களை வாசிக்க சொல்லி மாணவா்களின் வாசிப்புத் திறனை பாராட்டினாா்.

தொடா்ந்து, மாணவா்களிடம் பேசுகையில், ‘கல்வியைவிட மாணவா்களின் ஒழுக்கமே முதன்மையானது’ என்றாா்.

இதையடுத்து, நான் முதல்வா் திட்டம், புதுமைப் பெண்கள் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா்.

ஆய்வின்போது, பள்ளியின் தலைமை ஆசிரியா் இரா.சுப்பையா, ஆசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related posts

குஜராத்: தமிழக பக்தர்கள் 55 பேருடன் சென்ற சொகுசு பஸ் வெள்ளத்தில் சிக்கியது

வெள்ளத்தில் மூழ்கிய கார்: 2 மணி நேரம் சிக்கி தவித்த தம்பதி – வைரல் வீடியோ

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு