Saturday, October 12, 2024

பேடிஎம் சிஇஓ-வின் சர்ச்சைக்குரிய இரங்கல் பதிவு! வலுக்கும் எதிர்ப்பு!

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

பேடிஎம் சிஇஓவின் சர்ச்சைக்குரிய இரங்கல் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேடிஎம் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அஞ்சலி செலுத்தியதற்காக அவருக்கு இணையத்தில் கண்டனங்கள் வலுத்துள்ளன. கடுமையான எதிர்ப்பால் அவர் பதிவை நீக்கியுள்ளார்.

சாலை போடுவதே தோண்டுவதற்காகவா? மரண வாசல்களாகும் சாலைப் பள்ளங்கள்!!

தொழிலதிபர் ரத்தன் டாடா (86) முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை இரவு காலமானார்.

மேட்டூரில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு: குடிநீர் வினியோகம் பாதிப்பு

அவருக்கு 2000 -ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2008-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழிலதிபர்கள் அம்பானி, அதானி, பில்கேட்ஸ் உள்ளிட்டோர் என பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால், பீப்பிள் குரூப் சிஇஓ அனுபம் மிட்டல், ஜியோமியின் முன்னாள் சிஇஓ மனு குமார் ஜெயின், பாரத்பே முன்னாள் சிஇஓ அஷ்னீர் குரோவர் ஆகியோரும் டாடாவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

டிசிஎஸ் பங்குகள் 2% சரிவு!

இந்த நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் நிர்வாக தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மாவும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்தப் பதிவு இணையதளவாசிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதால் எக்ஸ் தளத்தில் நீக்கியுள்ளார். இருப்பினும் அவரது பதிவை ஸ்க்ரீஸ்சாட் எடுத்து பலரும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தப் பதிவில், “ரத்தன் டாடா ஒவ்வொரு தலைமுறையையும் ஊக்குவித்தார். அடுத்த தலைமுறை தொழில்முனைவோர், இந்தியாவின் மிகவும் எளிமையான தொழிலதிபருடன் பழகுவதைத் தவறவிடுவார்கள். வணக்கம்… டாடா பை பை..!!” என்று பதிவிட்டுள்ளார்.

ஜப்பான் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

wtf is the last line pic.twitter.com/dOrIeMQH7c

— Shivam Sourav Jha (@ShivamSouravJha) October 10, 2024

இதற்கு பதிலளித்து பேடிஎம் நிறுவனமும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில், “ரத்தன் டாடாவைப் பற்றிய சமீபத்திய பதிவால் ஏற்பட்ட மன உலைச்சலுக்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துகொள்கிறோம். அவரது மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும். நாங்கள் உண்மையிலேயே வருத்தப்படுகிறோம். டாடா எடுத்துக்காட்டிய நேர்மை, இரக்கம் மற்றும் கருணை ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு ஆழமான முத்திரையை பதித்துள்ளது. அவர் எப்போதும் நம் இதயங்களில் போற்றப்படுவார்” என்றும் பதிவிட்டுள்ளது.

பிச்சை எடுங்கள்.. சொத்துக்காக கொடுமைப்படுத்திய பிள்ளைகள்! பெற்றோர் எடுத்த முடிவு?

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024