Saturday, October 26, 2024

‘பேட்ட ராப்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள ‘பேட்ட ராப்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட்' திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'பேட்ட ராப்'. இந்த படத்தில் கதாநாயகியாக வேதிகா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரியில் தொடங்கி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்றது. ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் மோசன் போஸ்டர், இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள 'டான்ஸ் டான்ஸ்' வீடியோ பாடல் வெளியாகி வைரலானது. படத்தில் இடம் பெற்றுள்ள 'வச்சு செய்யுதே' வீடியோ பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனமாடியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லரை பார்க்கும்போது நடிகர் பிரபுதேவா ஹீரோவாக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். அதனால் ஏற்படும் சிக்கல்களை தடுத்து இறுதியில் ஹீரோவாக மாறிவிடுகிறாரா என்பது தான் படத்தின் கதை போல் தெரிகிறது. இந்த படத்தில் இயக்குனர் பேரரசு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பிரபுதேவாவிற்கு இந்த படம் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த திரைப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Dance…Fun…VibePresenting the complete Entertainment filled trailer of #PettaRap featuring @PDdancing@Vedhika4u & @SunnyLeone !!#PettaRapTrailerhttps://t.co/DGsNXTDNVp#PettaRapFromSep27#PaatuAdiAattamRepeat A @sinu_sj rideA #DImmanMusicalPraise God!TN…

— D.IMMAN (@immancomposer) September 20, 2024

Original Article

You may also like

© RajTamil Network – 2024