பேரழிவிலும் கொடூரம்; வயநாட்டில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

பெரும்பாவூர்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள அட்டமலை, வெள்ளரிமலை, பூஞ்சிரித்தோடு ஆகிய குக்கிராமங்களை கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு புரட்டிப்போட்டது.

இதில் வீடுகள், சாலைகள், பாலங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன. அங்கு வசித்த மக்கள் மண்ணில் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியும் காணாமல் போயினர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள் ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே அந்த நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், யாரும் இல்லாத அந்த வீடுகளில் திருட்டு கும்பல் கைவரிசை காட்டுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உயிருக்கு அஞ்சி அவசரம் அவசரமாக கிளம்பிய மக்கள் வீட்டில் இருந்த உடைமைகளை அப்படியே விட்டு விட்டு சென்றனர். இதனால், இப்படி பூட்டி கிடக்கும் வீடுகளை குறிவைத்து, கொள்ளை சம்பவம் நடப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. தன்னார்வலர்களும் தங்களின் விவரங்களை பதிவு செய்த பிறகே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024