Monday, September 23, 2024

பேருந்து முன்பதிவு: அரசின் புதிய செயலி அறிமுகம்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் (TNSTC) மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் கைபேசி செயலியை ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவு திட்டத்திற்காக தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (23.09.2024) தலைமைச் செயலகத்தில், ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவு திட்டத்தில், மேம்படுத்தப்பட்ட டி.என்.எஸ்.டி. சி. (TNSTC) இணையதளம் மற்றும் டி.என்.எஸ்.டி. சி. கைபேசி செயலியினை தொடங்கி வைத்தார்.

மேலும், பணியின் போது இறந்த மாநகர் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த பணியாளர்களின் 14 வாரிசுதாரர்களுக்கும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த பணியாளர்களின் 3 வாரிசுதாரர்களுக்கும் கருணை அடிப்படையிலான ஓட்டுநர், நடத்துனர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழக பொதுப்போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும் முக்கிய முயற்சியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் (TNSTC) மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் கைபேசி செயலியை, ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவு திட்டத்திற்காக (OTRS) போக்குவரத்துத் துறை அமைச்சர் இன்று (23 செப்டம்பர் 2024) துவக்கி வைத்தார்.

இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம், அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் (SETC) மற்றும் TNSTC பேருந்துகளுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் செயலி, தினசரி 2,600 பேருந்துகளில் 1.24 லட்சம் இருக்கைகளை எளிதாகவும், விரைவாகவும் முன்பதிவு செய்யும் வகையில் பயணிகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வசதிகளை கொண்டுள்ளது. இது பயணர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் பல புதிய அம்சங்களை கொண்டுள்ளது மற்றும் முன்பதிவு செயல்முறையை சீராகக் குறைக்கிறது.

ஊருக்குப் பேருந்து.. டிசம்பர் முதல் ஊரகப் பகுதிகளிலும் சிறிய பேருந்து சேவை!

மேம்படுத்தப்பட்ட தளத்தின் முக்கிய அம்சங்கள்:

இணைய தளம்:

1. முன்பதிவை முடிக்க குறைவான பக்கங்கள்

2. இருக்கைகள் தேர்வுக்கான கூடுதல் வடிகட்டி(Filters) விருப்பங்கள்

3. அனைத்து பக்கங்களும் பதிலளிக்கும் தன்மையில் (Responsive)

4. அதிகரித்த இருக்கை எண்ணிக்கையில் முன்பதிவுகளை நிறைவேற்ற உயர்வீதம் கொண்ட இணைய இணைப்பு

கைபேசி செயலி:

1. விருப்பமாக முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளை வேகமாக முன்பதிவு முடிக்க

2. மேம்பட்ட பயணர் அனுபவம்

இந்த மேம்படுத்தப்பட்ட முறைகள், தமிழக பொதுப் போக்குவரத்து சேவையில் ஒரு முக்கிய முன்னேற்றத்தை குறிக்கின்றன. மேலும், பயணிகள் மேம்படுத்தப்பட்ட www.tnstc.in என்ற இணையதளத்திலும் அல்லது TNSTC கைபேசி செயலியினை முக்கிய தளங்களில் பதிவிறக்கவும் செய்து பயணச்சீட்டை முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024