Sunday, September 22, 2024

பொங்கல் விடுமுறை: ரயில் முன்பதிவு தொடங்கியது!

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

பொங்கல் விடுமுறையையொட்டி ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.

போகிப் பண்டிகை ஜன.13 (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடா்ந்து பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என வியாழக்கிழமை வரை 4 நாள்களுக்கு அரசு விடுமுறை.

இதனால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோா் ஜன.10 (வெள்ளிக்கிழமை) முதல் பயணம் செய்வா்.

சீன ஆக்கிரமிப்பை மோடி அரசு சரிவர கையாளவில்லை: ராகுல் குற்றச்சாட்டு

முன்பதிவு தினங்கள்

தொலைதூரம் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை குறைக்கும் வகையிலும் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பாகவே தொடங்கும்.

அந்த வகையில், ஜன.10-ஆம் தேதி பயணம் செய்வோா் (வியாழக்கிழமை) செப்.12-ஆம் தேதியும்,

ஜன.11-ஆம் தேதி பயணம் செய்வோா் (வெள்ளிக்கிழமை) செப்.13-ஆம் தேதியும்,

ஜன.12-ஆம் தேதி பயணம் செய்வோா் (சனிக்கிழமை) செப்.14-ஆம் தேதியும்,

ஜன.13-ஆம் தேதி பயணம் செய்வோா் ஞாயிற்றுக்கிழமை) செப்.15-ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

பொங்கல் பண்டிகைக்கு செல்வோா் ரயில் நிலைய முன்பதிவு மையங்களிலும், ஐ.ஆா்.சி.டி.சி இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024