Monday, September 23, 2024

பொங்கல் வெளியீடாக தக் லைஃப், விடாமுயற்சி?

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

தக் லைஃப் மற்றும் விடாமுயற்சி படங்களின் வெளியீடு குறித்து தகவல் கசிந்துள்ளது.

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அஜித் குட் பேட் அக்லியில் நடித்து வருகிறார்.

இப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக வெளிவரும் என அறிக்கப்பட்டிருந்தது. ஆனால், விடாமுயற்சி படமே முடிவடையாமல் இருப்பதால், பொங்கலுக்கு விடாமுயற்சியை வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது.

அதேநேரம், நடிகர் கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ரசிகர்களைக் கவரும் மனசிலாயோ!

தற்போது, இதன் படப்பிடிப்பு ஜெர்மனியில் நடைபெற்று வருவதாகவும் இதில் நடிகர்கள் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வனுக்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தக் லைஃப் படப்பிடிப்பில்…

இதனால், 2025 பொங்கல் வெளியீடாக தக் லைஃப் திரைப்படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024