பொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்: நிவாரணம் அறிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

பொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

நீலகிரி மாவட்டம், சேரங்கோடு கிராமம், பாலவயல் பகுதியிலுள்ள பொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம். நெல்லியாளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வன். குணசேகரன் (வயது 18) த/பெ.குமார் என்பவர் இன்று (20.07.2024) பிற்பகல் 01.30 மணியளவில் சேரங்கோடு கிராமம், பாலவயல் பகுதியிலுள்ள பொன்னானி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் சேரங்கோடு கிராமம், பாலவயல் பகுதியிலுள்ள பொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/aux6h9FDcd

— CMOTamilNadu (@CMOTamilnadu) July 20, 2024

You may also like

© RajTamil Network – 2024