பொற்கோவிலில் யோகா செய்த பெண் மீது வழக்குப்பதிவு!

by rajtamil
0 comment 33 views
A+A-
Reset

பொற்கோவிலில் யோகா செய்த பெண் மீது வழக்குப்பதிவு!அமிர்தசரஸ் பொற்கோவிலில் யோகா செய்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக இன்ஸ்டாகிராம் பிரபலமான பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பொற்கோவிலில் யோகா செய்த பெண் மீது வழக்குப்பதிவு!

சர்வதேச யோக தினமான ஜூன் 21 அன்று அமிர்தசரஸ் பொற்கோவிலில் யோகா செய்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக ஆடை வடிவமைப்பாளரும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான அர்ச்சனா மக்வானா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக உதவி காவல் ஆணையர் குல்தீப் சிங் பத்திரிகையாளர்களுடன் பேசுகையில், “நாங்கள் கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தோம். அந்தப் பெண் கோவிலில் தரிசனம் செய்யாமல் யோகா செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளியேறினார். மேலும், விளம்பரத்துக்காக அதனைச் செய்வது தெரிந்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்தோம்” என்று கூறினார்.

கடந்த வெள்ளி (ஜூன் 21) அன்று, கோவில் வளாகத்தில் யோகா செய்து, சீக்கியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக ஷிரோமணி குருதுவாரா பிரபந்தக் கமிட்டி (எஸ்.ஜி.பி.சி) சார்பில் அந்தப் பெண் மீது காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் பெண்ணை கோவில் வளாகத்தில் யோகா செய்ய அனுமதித்ததற்காக அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் 3 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவில் கமிட்டியான எஸ்.ஜி.பி.சி சார்பில் கோவில் ஊழியர் ஒருவருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அர்ச்சனா மக்வானா, “ நான் யோகா செய்தது எவருடைய மத உணர்வையும் புண்படுத்தும் என்று நினைக்கவில்லை. அவ்வாறு புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்டுக் கொண்டார்.

You may also like

© RajTamil Network – 2024