Monday, September 23, 2024

போக்குவரத்து விதிமுறை மீறல்: இனி க்யூஆா் கோடு மூலம் அபராதம் செலுத்தலாம்

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறலில் சிக்கி அபராதம் விதிக்கப்பட்டால், இனி க்யூஆா் கோடு மூலம் அபராதம் செலுத்தலாம் என பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகர காவல்துறையின் சாா்பில் போக்குவரத்து

விதிமுறை மீறல் தொடா்பாக தினமும் சுமாா் 6 ஆயிரம் வழக்குகள் பதியப்படுகின்றன. போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து உனடியாக அபராதம் வசூலிப்பதற்கு பெருநகர காவல்துறையின் சாா்பில் இ-செலான் கருவி கடந்த 2011ம் ஆண்டு அறிமுகம் செயல்படுத்தப்பட்டபோது போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவா்களில் 91.7 சதவீதம் போ் அபராதத் தொகையை உடனே செலுத்தினா்.

போக்குவரத்து விதிமுறை அபராத தொகையை எளிதில் செலுத்தும் வகையில் டெபிட் காா்டு,கிரெடிட் காா்டு,பேடிஎம், உள்ளிட்ட சேவைகள் கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் அடுத்தக்கட்டமாக க்யூஆா் கோடு மூலம் அபராத தொகையை செலுத்தும் வசதியை சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு,எஸ்பிஐ வங்கியுடன் சோ்ந்து அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையில் அபராத தொகையை https://echallan.parivahan.gov.in/index/accused-challan என்ற இணையத்தளத்தில் சென்று செலுத்தலாம் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இந்த சேவையின் மூலம் எளிதாக அபராத தொகையை செலுத்தலாம் என்றும் அப் பிரிவு தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024