போர்ப்ஸ் பட்டியல்.. இந்திய கோடீஸ்வரர்களில் 4-வது இடத்தில் ஷிவ் நாடார்

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், நாட்டின் டாப்-10 பணக்காரர்கள் யார்? என்பதை போர்ப்ஸ் பட்டியலில் காணலாம்.

அமெரிக்க ஊடக நிறுவனமான போர்ப்ஸ் (Forbes) இணையதளத்தில் உலக கோடீஸ்வரர்கள் தொடர்பான நிகழ்நேர பட்டியலில் சுமார் 200 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி இந்திய கோடீஸ்வரர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இவர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 12-வது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 118 பில்லியன் டாலர் ஆகும்.

இந்திய பட்டியலில் கவுதம் அதானி (அதானி குரூப்) இரண்டாவது இடத்திலும், சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் (ஜே.எஸ்.டபுள்யூ குரூப்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் (வயது 79) நான்காவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 38.4 பில்லியன் டாலர் (ரூ.3.21 லட்சம் கோடி) ஆகும்.

அவரைத் தொடர்ந்து இயக்குனர் திலிப் சங்வி (சன் பார்மா), சைரஸ் பூனவல்லா (சீரம் இன்ஸ்டிடியூட்), குமார் பிர்லா (ஆதித்யா பிர்லா குழுமம்), ராதாகிருஷ்ணன் தமானி (அவன்யூ சூப்பர்மார்க்கெட்டுகள், குஷால் பால் சிங் (டி.எ.எப். லிமிடெட்), ரவி ஜெய்புரா (வருண் பெவரேஜஸ்) ஆகியோர் டாப்-10 பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Related posts

Namakkal police have been arrested Kerala ATM robbers and one killed in police encounter.

Skoda Teases Elroq Electric SUV; Set For Global Debut On October 1

கெத்து தினேஷ்..! பிரபலங்கள் வாழ்த்து மழையில் நடிகர் தினேஷ்!