Saturday, October 19, 2024

போர் மேகம்.. அணுகுண்டு வீச்சில் உயிர்பிழைத்தோர் அமைப்புக்கு நோபல்! காரணம்?

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஜப்பான் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களுக்கான ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்து.

அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அமைப்பதற்கான கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற இந்த அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பி ஆனால் மரணத்தைவிடவும் பாதிக்கப்பட்டோரின் நலனுக்காகவும், அணுகுண்டு இல்லாத உலகை உருவாக்கவும் நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்பு தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளது.

இதையும் படிக்க.. எளிமையே டாடாவின் அடையாளம்!

2024-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு மிக உயரிய விருதான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் போர் மேகம் சூழ்ந்திருக்கும் நிலையில், ஏற்கனவே அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அமெரிக்க அணுகுண்டு வீச்சுகளில் இருந்து தப்பியவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு, அணு ஆயுதங்களுக்கு எதிரான செயல்பாட்டிற்காக அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க.. சாலை போடுவதே தோண்டுவதற்காகவா? மரண வாசல்களாகும் சாலைப் பள்ளங்கள்!!

நார்வே நோபல் குழுவின் தலைவரான ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னெஸ், இந்த விருது அறிவிப்பு குறித்து கூறுகையில், அணு ஆயுத பயன்பாட்டிற்கு எதிரான போராட்டங்களுக்கு தற்போது கடுமையான அழுத்தம் இருப்பதால், அந்த அமைப்புக்கு நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது என்றார்.

அணுகுண்டு வீச்சிலிருந்து தப்பினாலும் கூட, அவர்களது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் உடல் நலப் பிரச்னைகளால் ஏற்படும் துன்பம் மற்றும் உறவு மற்றும் பிறப்பிடத்தை இழந்த வலிமிகுந்த நினைவுகளுடன் நம்பிக்கையை இழக்காமல், மற்றவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கவும் அமைதியை பரப்பவும், தங்களது விலைமதிப்புமிக்க கொடூர அனுபவத்தைப் பயன்படுத்த தேர்வு செய்த அனைவரையும் கௌரவிக்க வகையில்தான் இந்த பரிசு வழங்கப்படுகிறது என்றார்.

வரும் திங்கள்கிழமை பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்புடன், இந்த பரிசு அறிவிப்பு நிகழ்வு நிறைவுபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024