Wednesday, September 25, 2024

போலிஸ் எனக்கூறி 10 பெண் காவலர்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

8 ஆம் வகுப்பு தான் படிப்பு.. 10 பெண் காவலர்களை பாலியல் வன்கொடுமை செய்த போலி காவலர்.. உ.பி-யில் அதிர்ச்சி8 ஆம் வகுப்பு தான் படிப்பு.. 10 பெண் காவலர்களை பாலியல் வன்கொடுமை செய்த போலி காவலர்.. உ.பி-யில் அதிர்ச்சி

தான் ஒரு போலிஸ் அதிகாரி எனக் கூறி 2 பெண் காவலர்களை ஏமாற்றி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக உத்தர பிரதேசத்தில் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் லக்கீம்பூர்-கேரியில் வர்மா ராஜன் என்பவர் இனிப்புகளை தயாரிக்கும் ஆலையை நடத்தி வந்தார். இவர் தனது இனிப்புகளை அயோத்திக்கும் வணிக ரீதியாக வழங்கி வந்தார். இப்படியிருக்க சுனில் குப்தா என்பவரை ஒருமுறை சந்தித்துள்ளார்.

சுனில் குப்தா என்பவர், தான் ஒரு சிறப்பு புலனாய்வுத்துறையில் இருப்பதாகக் கூறி, அவரிடம் அறிமுகமாகியுள்ளார். மேலும் வர்மாவுக்கு போலீசில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சத்தைப் பெற்றுள்ளார். மேலும் சில காலம் வர்மாவுடனே சுனில் தங்கியுள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
உ.பி-யை அச்சுறுத்தும் ஓநாய்கள் – கண்டதும் சுட யோகி ஆதித்யநாத் உத்தரவு

சுனிலுடன் இருந்த காலத்தில் தான், வர்மா போலிஸார் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைக் கற்றுள்ளார். எப்படி உடை அணிய வேண்டும், எப்படி சல்யூட் செய்ய வேண்டும் என்று முழுவதும் அவரிடம் தெரிந்துகொண்டார். ஆனால் சொன்னபடி சுனில், வர்மாவுக்கு வேலை வாங்கித் தரவில்லை. இதுகுறித்து சுனிலின் மீது வர்மா அயோதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து சிறுது பணத்தை மீட்டார்.

விளம்பரம்

இதன் பிறகு தான் வர்மா தனது வேலையைக் காட்டத் தொடங்கினார். தான் ஒரு போலிஸ்காரர் என்று பேசி, பழகி, ஒரு மகளிர் போலிஸைத் திருமணமும் செய்துகொண்டார் வர்மா. சிறுது நாட்களில் இவர் 8ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்ற உண்மை அந்த காவலருக்குத் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் காவலர், வர்மாவிடமிருந்து பிரிந்தார்.

இயற்கையாகவே உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் 8 உணவுகள்.!
மேலும் செய்திகள்…

இதையடுத்து இணையதளத்தில் உத்தரபிரதேச போலிஸாரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து திருமணமாகாத மகளிர் காவலர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர்களில் ஒரு மகளிர் காவலரிடம், தான் திருமணம் ஆகாதவர் எனக்கூறி ஏமாற்றியுள்ளார். மேலும் அந்த காவலரைத் திருமணம் செய்துக்கொள்வதாகக் கூறி பாலியல் உறவிலும் ஈடுபட்டுள்ளார்.

விளம்பரம்

மேலும் இந்தக் காவலர் பெயரில் சுமார் ரூ.6.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல், அந்தப் பெண் காவலர் ஆதார் அட்டை, பான் கார்டை வைத்து ரூ.23,50,000 கடன் பெற்றுள்ளார். இதை வைத்து ஒரு கார் வாங்கியுள்ளார் வர்மா.

ஆனால் இவர் காவலர் இல்லை என்றும், 8ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார் என்றும் தெரியவர, அந்தப் பெண் காவலர் வர்மா ராஜன் மீது புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பெயரில் வர்மாவின் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

இவர்கள் மட்டுமில்லாமல், வர்மா சுமார் 10 பெண் காவலர்களை ஏமாற்றியுள்ளார் என்று திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் காவலர்களையே ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Crime News
,
uttar pradesh

You may also like

© RajTamil Network – 2024