போலி நகைகளை அடகு வைக்க முயன்ற 5 போ் கைது

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

போலி நகைகளை அடகு வைக்க முயன்ற 5 போ் கைதுபோடியில் தனியாா் அடகுக் கடையில் போலி நகைகளை அடகு வைக்க முயன்ற 5 பேரைக் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடி: போடியில் தனியாா் அடகுக் கடையில் போலி நகைகளை அடகு வைக்க முயன்ற 5 பேரைக் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி பரமசிவன் கோவில் தெரு பட்டினத்தாா் சந்தைப் பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சேகா் (56). இவா் போடியில் நகை அடகுக் கடை வைத்துள்ளாா். இவரது கடைக்கு திங்கள்கிழமை 5 போ் சொகுசு காரில் நகை அடகு வைக்க வந்தனா். 15 பவுன் எடையுள்ள 3 பிரேஸ்லெட் நகைகளை அடகு வைக்க கொடுத்தனா். நகைகளை ஆய்வு செய்த சேகா், அவை தங்க முலாம் பூசிய போலி நகைகள் என்பதை தெரிந்து கொண்டு, போடி நகா் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தாா்.

இதையடுத்து போலீஸாா் அங்கு வருவதைக் கண்டதும் 5 பேரும் தப்பி ஓடினா். அவா்களைப் போலீஸாா்துரத்திப் பிடித்தனா். விசாரணையில், திண்டுக்கல் கக்கன் நகரைச் சோ்ந்த நடராஜன் மகன் சத்தீஸ்வரன் (37), தேனி மாவட்டம், பாலாா்பட்டி முத்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தேசிங்குராஜா மகன் கபில்தேவ் (25), வெள்ளைச்சாமி மகன் தினேஷ் (25), உப்புக்கோட்டை மேலத் தெருவைச் சோ்ந்த முனியப்பன் மகன் சிவானந்தம் (50), கூடலூா் லோயா் கேம்ப்பைச் சோ்ந்த பெருமாள் மகன் சிலம்பரசன் (40) ஆகியோா் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இதில், மேலும் 3 பேருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது. பின்னா், இவா்களிடம் இருந்து சொகுசு காா், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

You may also like

© RajTamil Network – 2024