Tuesday, October 22, 2024

மகளிர் உலகக் கோப்பை: முதல் போட்டியில் வங்கதேசம் வெற்றி!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

மகளிர் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றியைப் பதிவு செய்தது.

மகளிருக்கான 9-வது உலகக்கோப்பைப் போட்டி ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷாதி ரானியும் முர்ஷிதா காடுன் இருவரும் களமிறங்கினர்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 26 ரன்கள் சேர்த்த நிலையில் காடுன் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷாதி 29 ரன்களில் ஆட்டமிழக்க, சோபனாவும் 36 ரன்களில் அவுட்டானார்.

கேப்டன் நிகர் சுல்தானா 18 ரன்னிலும் தனது விக்கெட்டைப் பறிகொடுக்க மற்ற வீராங்கனைகள் யாரும் சோபிக்கவில்லை.

வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் சேர்த்தது. ஸ்காட்லாந்து தரப்பில் சஸ்கியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து தனது இன்னிங்ஸில் 120 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம்புகுந்த சஸ்கியா 8 ரன்னிலும், அலிசா இருவரும் தலா 11 ரன்னிலும், சாரா பிரிஸ் ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் கத்ரின் பிரிஸ் 49* ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

ஸ்காட்லாந்து அணி ஓவர்களில் ரன்கள் மட்டும் எடுத்தது. வங்கதேச தரப்பில் ரிது மோனி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஸ்காட்லாந்து அணியால் 20 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் வங்கதேச அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

You may also like

© RajTamil Network – 2024