Friday, September 20, 2024

மகளிர் டி20 உலகக்கோப்பை; அக்டோபர் 6-ல் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

துபாய்,

10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதலில் இந்த தொடர் வங்காளதேசத்தில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் சமீபத்தில் வங்காளதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த தொடர் தற்போது யு.ஏ.இ-யில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான புதிய போட்டி அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

தொடரின் தொடக்க நாளான அக்டோபர் 3ம் தேதி ஷார்ஜாவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் – ஸ்காட்லாந்து அணிகள் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் அக்டோபர் 4ம் தேதி நியூசிலாந்தை துபாயில் சந்திக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அக்டோபர் 6-ல் துபாயில் சந்திக்கிறது.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டங்கள் அக்டோபர் 17 மற்றும் 18ம் தேதிகளில் முறையே துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி அக்டோபர் 20ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினால் முதலாவது அரையிறுதில் ஆடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Unveiling the updated fixtures for the ICC Women's #T20WorldCup 2024 https://t.co/k4chTlN68C

— ICC (@ICC) August 26, 2024

You may also like

© RajTamil Network – 2024