Saturday, September 21, 2024

மகளிர் டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்?

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

மகளிர் டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாய்,

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்திருந்தது. ஆனால், தற்போது வங்காளதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற ஐ.சி.சி திட்டமிட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ மறுப்பு தெரிவித்துவிட்டது. மழைக்காலம் என்பதால் போட்டியை நடத்த வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

யு.ஏ.இ (ஐக்கிய அரபு அமீரகம்) இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஒன்றில் உலகக்கோப்பை தொடர் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில்,மகளிர் டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாய், அபுதாபி, சார்ஜாவில் உலக தரம் வாய்ந்த மைதானங்கள் இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஐ சி சி விரைவில் இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024