Friday, September 20, 2024

மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடம் பிடித்த ஹர்மன்பிரீத் கவுர்

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

மகளிர் ஆசிய கோப்பை தொடரில் யு.ஏ.இ. அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் 66 ரன்கள் குவித்தார்.

தம்புல்லா,

மகளிர் ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற யு.ஏ.இ. பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா அதிரடியாக விளையாடி 201 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் 66 ரன்களும், ரிச்சா கோஷ் 64 ரன்களும் குவித்தனர். யு.ஏ.இ. தரப்பில் அதிகபட்சமாக கவிஷா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய யு.ஏ.இ. அணி 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் யு.ஏ.இ. அணியை வீழ்த்திய இந்தியா நடப்பு தொடரில் 2-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

யு.ஏ.இ. தரப்பில் அதிகபட்சமாக கவிஷா 40 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் அடித்த 66 ரன்களையும் சேர்த்து சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அவர் இதுவரை 3,415 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மெக் லானிங்கை (3,405 ரன்) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் (4,348 ரன்) உள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024