Friday, September 20, 2024

மகாராஜாவாக விஜய் சேதுபதி உருவான விதம்… பிடிஎஸ் வீடியோ வெளியீடு

by rajtamil
0 comment 33 views
A+A-
Reset

மகாராஜா திரைப்படம் உருவான விதம் குறித்து படக்குழு பிடிஎஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மகாராஜா. இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் 50-வது படமாகும். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்து இருக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

படத்தில், விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வௌியானது. படம் வௌியான முதல் நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இத்திரைப்படம் விஜய் சேதுபதிக்கு ஒரு கம்பேக்காக அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

BTS from the world of #Maharaja#MegaBlockbusterMaharaja#MakkalSelvan@VijaySethuOffl Written and Directed by @Dir_Nithilan@anuragkashyap72@mamtamohan@Natty_Nataraj@Abhiramiact@AjaneeshB@Philoedit@DKP_DOP@Selva_ArtDir@rajakrishnan_mr@ActionAnlarasu… pic.twitter.com/oOFLQYY3pA

— Passion Studios (@PassionStudios_) June 25, 2024

சுமார் 80 கோடி ரூபாய்க்கு மேல் இத்திரைப்படம் வசூல் ஈட்டி வருகிறது. இந்நிலையில், மகாராஜா திரைப்படம் உருவான விதம் குறித்து படக்குழுவினர் பிடிஎஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024