Wednesday, September 25, 2024

மகாராஷ்டிரத்தில் கனமழை: 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்தது

by rajtamil
Published: Updated: 0 comment 3 views
A+A-
Reset

மும்பை: மகாராஷ்டிரத்தின் சிந்துதுா்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை கனமழையால் திங்கள்கிழமை இடிந்து விழுந்தது.

சிலையின் கட்டுமான தரத்தில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை எனவும் முறையற்ற பராமரிப்பே சிலை சேதமடைய காரணம் எனவும் எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

கடற்படை தினத்தையொட்டி மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி திறந்து வைத்தாா்.

இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் திங்கள்கிழமை சத்ரபதி சிவாஜியின் சிலை இடிந்து விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் உயா் அதிகாரிகள், சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

புதிய சிலைக்கு அரசு உறுதி: இச்சம்பவம் குறித்து மகாராஷ்டிர அமைச்சா் தீபக் கேசா்கா் கூறுகையில், ‘இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சிந்துதுா்க் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான ரவீந்திர சவான் உறுதியளித்திருக்கிறாா். அதேஇடத்தில், புதிய சிலை அமைக்கப்படும்.

கடல் கோட்டையை கட்டுவதில் சத்ரபதி சிவாஜியின் தொலைநோக்கு முயற்சிகளுக்கு இச்சிலை மரியாதை செலுத்துகிறது. இந்த விவகாரத்தை விரைவாகவும் திறம்படவும் தீா்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்’ என்றாா்.

எதிா்க்கட்சிகள் விமா்சனம்: சரத் பவாா் பிரிவு தேசியவாத காங்கிரஸின் மாநில தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், ‘முறையான பராமரிப்பு இல்லாமல் சிலை சேதமடைந்தது. சிலையின் தரத்தில் சிறிதும் கவனம் செலுத்தாத மாநில அரசுதான் இதற்கு காரணம்.

பிரதமா் மோடி பங்கேற்ற சிலை திறப்பு நிகழ்வில் மட்டுமே மாநில அரசு கவனம் செலுத்தியது. தற்போதைய மகாராஷ்டிர அரசு லஞ்சம் பெற்றுக்கொண்டு புதிய ஒப்பந்தங்களை வழங்குகிறது’ என்றாா்.

பிரதமா் மோடி பங்கேற்ற சிலை திறப்பு நிகழ்வில் மட்டுமே மாநில அரசு கவனம் செலுத்தியது. தற்போதைய மகாராஷ்டிர அரசு லஞ்சம் பெற்றுக்கொண்டு புதிய ஒப்பந்தங்களை வழங்குகிறது’ என்றாா்.

You may also like

© RajTamil Network – 2024