Tuesday, September 24, 2024

மகாராஷ்டிரம்: முதியவரை தாக்கிய 4 பேருக்கும் கைதான ஒரு மணி நேரத்தில் ஜாமீன்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே, ஓடிக்கொண்டிருந்த ரயிலில், ஹாஜி அஷ்ரஃப் மனியார் என்ற முதியவரை தகாத வார்த்தைகளால் மிரட்டி, கடுமையாக தாக்கிய நான்கு பேர் கைதான நிலையில், ஒரு மணி நேரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ஓடும் ரயிலில் முதியவரை நான்கு பேர் கடுமையாக தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த விடியோவின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

முதியவரின் முகம், நெஞ்சு மற்றும் வயிற்றில் நான்கு பேரும் கடுமையாக குத்தினர். அவரிடமிருந்து செல்ஃபோனை பறித்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும் உள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் விடியோ எடுத்துப் பதிவிட்டிருந்தனர். மேலும், அந்த நால்வரும், முதியவரை ஓடும் ரயிலிலிருந்து தூக்கி வீசிவிடுவோம் என்று எச்சரித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதிலும் முறைகேடா? டாப் ரேங்க் எடுத்த காவல்துறை பயிற்சி எஸ்ஐ! மறுதேர்வில்..

மாட்டிறைச்சி வைத்திருந்ததாகச் சந்தேகத்தின் பேரில், முதியவரை அந்த நால்வரும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

எஃப்ஐஆர்-பதிவு செய்வதில் அலட்சியம்

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில், தானே ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், அந்த முதல் தகவல் அறிக்கையில், வெறுக்கத்தக்க பேச்சு, கும்பல் தாக்குதல், கொள்ளை, கொலை முயற்சி போன்ற எந்த வார்த்தைகளையும் சேர்க்க முன்வரவில்லை. ஆனால், இவை பாதிக்கப்பட்டவர் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதனால், கைது செய்யப்பட்ட நால்வரும் ரூ.15 ஆயிரம் செலுத்தி, கைதான ஒரு மணி நேரத்தில் பிணையில் விடுதலை செய்யப்படக் காரணமாக இருந்துள்ளது.

இதில், முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் ஆஷுஅவ்ஹத் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் சிறப்புப் பாதுகாப்புப் படை வீரரின் மகன் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், முதியவரை தாக்கியவர்கள் மும்பைக்கு பயணம் செய்ததாகவும், அவர்கள் காவல்துறைத் தகுதித் தேர்வில் பங்கேற்க சென்றுகொண்டிருந்ததாக வெளியான தகவலால் மக்கள் கவலை அடைந்துள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You may also like

© RajTamil Network – 2024